மகிழ்வுடன் வாழ்வோம்....!!!
மகிழ்வுடன் வாழ்வோம்....!!!
வாழ்வில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட
உடனே சோர்ந்து போய்
இதோடு வாழ்வே முடிந்து விட்டது என்பது போல்
எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி
எதன் மீதும் நாட்டம் இல்லாமல்
எப்பொழுதும் எதையோ பறி கொடுத்தது போல்
முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு
ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட கண்ணீர் சிந்தி
விதி மேல் பழி சுமத்தி
தன்னை தானே வருத்திக் கொண்டு
எவரோடும் நட்பு கொள்ளாது
உறவுகளே வேண்டாம் என ஒதுங்கி
தனிமையை நாடிச் சென்று
தற்கொலை எண்ணத்தையும் மனதில் வளர விட்டு
ஏன் வாழ்கிறோம் என அலுத்துக் கொண்டு
வாழும் அளவிற்கு மன அழுத்தம் ஏற்பட்டு
மனசோர்வு அடைந்து ஏன் தன் மகிழ்ச்சியை
தானே அழித்துக் கொண்டு வாழ வேண்டும்....
ஏற்றத் தாழ்வு இல்லாது பாதை இல்லை
இரவு பகல் இல்லாது நாள் ஓடுவதில்லை
அது போல் வாழ்வு என்பதும் இன்பதுன்பம் இன்றி நகர்வதில்லை
இதை மனதில் கொண்டு எதற்கும் அஞ்சாது
மனதை போட்டு வதைத்துக் கொள்ளாது
மனசோர்வு அடைந்து வாழ்வே போய் விட்டது என
தற்கொலை எண்ணத்தை மனதில் விதைக்காது
இதுவும் கடந்து போகும் என விட்டுவிட்டு
அடுத்த வேலையில் கவனம் செலுத்தி
தன்னை தானே உற்சாகப்படுத்திக் கொண்டு
வாழும் வாழ்வை மகிழ்வுடன் வாழ்வோம்...!!!
