கக்கிய கள்ளிப்பால்
கக்கிய கள்ளிப்பால்


கொத்துக் கொத்தாய்
கண்ணீர் மலர்கள்
சீழ்கோர்த்துச் சுருங்கிய
தீண்டல் ரணங்கள்
வெட்கித் தவித்த
பிஞ்சு அகங்கள்
மீசை முறுக்கிய
ராட்சச முகங்கள்
கருமை பூசிய
தனிமைப் பகல்கள்
அண்ணனும் மாமனும்
மானமிழந்த கதைகள்
சொல்ல பயந்த
கோழைப் பெண்கள்
ஆண்மை வளர்த்த
வீரத் தாய்கள்
இனியும் வேண்டாம்
“மீ டூ” கோஷங்கள்
உதிர்ப்போம் இன்றே
உடலின் கூச்சங்கள்
ஆண்பெண் உடல்கள்
சுரப்புநீர் தாக்கங்கள்
அதில்பூசிட வேண்டாம்
கலாச்சார வர்ணங்கள்
உரக்க உரைப்போம்
பாலியல் அறிவியல்கள்
பெண்ணியம் உணர்தல்
பகுத்தறிவு தீண்டல்கள்!