வறுமை
வறுமை


நிம்மதியாய் தூங்க
நித்தம் அலையும்
நிலையே வறுமை ......!!!
உண்ண உணவின்றி
உடுக்க உடையின்றி
உறங்காத வறுமை ......!!!
எங்கும் ஏக்கம்
ஒரு ஜான் வயிறு பசி
புசிக்க ஒரு வாய் சோறு....!!!
தனிமையில் தவிப்பு
கிழியாத துணிமணி
அணிய விரும்பும் வறுமை ....!!!
யாரும் எப்போதும்
வறுமையை தேடி போவதில்லை
வறுமைதான் சிலரை துரத்துகிறது ....!!!
>நான்.....
பள்ளி பயின்ற காலத்தில்
கல்லூரி பயின்ற நேரத்தில்
வேலை செல்லும் நாட்களில் - கண்டேன்
சிலரை வறுமையின் போர்வையில்
பல வருடங்களாக அவர்கள்
அதே இடத்தில்
அவர் எண்ணங்கள் மாறவில்லை
அவர் சிந்தனைகள் மாறவில்லை
மாறியது அவர்கள் வயது மட்டும்.....!!!
ஏனோ....
வாடும் வறுமையில் உயிர்கள் - ஆனால்
வாடாமல் வறுமை மட்டும்
இம் மண்ணில் ஆலம் விழுதுகளாய்
கலை கட்டுதே .....!!!