என் அம்மா
என் அம்மா


அம்மா எனும் வார்த்தை உயிர் மூச்சில் உள்ளது,
நீ தந்த பாலை குடித்து வராத அன்பு நான் தரும் போது வந்தது உன்மேல் அன்பு,
நீ எனக்காக செய்தது தீயாகமல்ல அதுவும் உன் அன்பு தான்,
என் கண்ணீரை துடைத்த உன் கை உன் கண்ணீரை ஏனோ என்னிடம் மறைத்தது,
என்னை நினைத்து எத்தனையோ நாள் தூங்காமல் விழித்தாய் நானோ என் விழி கொண்டு உன்னை பார்க்க தவறினேன்,
உன் சமையலை ருசிக்க நேரம் ஒதுக்கவில்லை இன்று அந்த மணம் தேடி தவிக்கிறேன்,
0, 0, 0); background-color: transparent;">உன் அன்பை உன்னை விட்டு விலகிய பின் உணர்தேன்,
ஏங்குகிறேன் இன்னொரு வீட்டு பெண்ணான நான் எப்போது உன் மகளாக அந்த அணைப்பை மீண்டும் கிடைக்கும் என்று,
எனக்காக எல்லாம் தந்தாய் கேட்காமல் உனக்காக என்னிடம் எதுவும் கேட்கவில்லை ஏனோ??
இதுதான் அம்மாவா..........
அப்படி என்றால் உனக்காக எதையும் செய்ய நினைக்கும் இன்னொரு அம்மா !!
நீ எனக்கு மகளாக வேண்டும் என்று தாய்மை விரும்புகிறது........
.