அன்னையர் தினம்
அன்னையர் தினம்
🤱🏻ஒரே குணம் உலகமெங்கும் ஒரே உணர்வு தாய்மை...
ஜாதி மத பேதமில்லை ஐந்தறிவு ஆறறிவு என்ற ஞானம் இல்லை ஒரே மாண்பு தாய்மை..
குட்டி குருவிக்கு உணவூட்டும் தாய் குருவி முதல் பிள்ளைக்கு பாலூட்டும் அன்னை வரை மிளிர்கிறது தாய்மை..
🤱🏻அம்மா என்ற ஒரு மந்திர வார்த்தை அது எத்துணை எத்துணை வல்லமை கொண்டது..
🤱🏻பசி என்று சொல்லும் முன்னே உணவூட்டும்,
கண்ணீர் துளி கன்னம் தாண்டும் முன்னே கண் துடைக்கும்..
மனம் வருந்தும் வேளையிலே மடி கொடுக்கும்..
போராடும் வேளையிலே தோள் கொடுக்கும்..
வீடு திரும்பும் நேரம் வரை எனக்காக காத்திருக்கும் தாயே..
என் துன்பத்தை எண்ணி என்னை விட அதிகமாக துன்புறுபவள் நீயே..
🤱🏻நீயிருக்கையிலே வேண்டுதலை கடவுளிடம் சொல்லும் வேலை எனக்கில்லை.. எனக்காக தன்னை வருத்தி கொள்ளும் தாயே, உனக்காக ஏது செய்யும் இந்த சேயே...
🤱🏻கருவறையில் முகம் காணா எனக்காக க
னா கண்டாய்..
பிறக்கும் முன்னே எனக்காக வலி பொறுத்தாய்..
என் உடலின் உணர்வு நீயானாய்..
பெயர் எழுத அறியா நீ, என் பெயரில் பல பட்டங்கள் சேர்த்தாய்..
🤱🏻தாயே ..உன் நிலை முழுதாய் நான் அறிந்தேன் என் பிள்ளைதனை கையில் நான் ஏந்தும் வேளையிலே..
🤱🏻இரத்தமும் சதையுமாய் உயிர் கொடுத்தவள் நீ..
மற்றவர் போற்றும் வாழ்வு நான் வாழ பாதை அமைத்தவள் நீ..
கடவுள் காட்டிய மிகப்பெரிய கருணை நீ..
உலகம் கொள்ளும் அளவில்லா பெருமை நீ..
🤱🏻என் உடலினைக் கொண்டு பல்லாக்கு தான் அமைத்து,
என் உயிர் கொண்டு அதை நான் உயர்த்த, என்னைத் தாங்கும் தேவதையே உன்னை நான் தாங்க, உனக்கு நான் பட்ட கடன் தீருமோ.. உன் மனம் தான் அதை தாங்குமோ..
👩👧ஆகையால் மனம் என்ற மை கொண்டு எழுதினேன் ஒரு கவிதை அன்னையர் தின வாழ்த்துக் கூற, வணங்குகிறேன் உன்னை ,என் அகம் குளிர அம்மா....🙏🏻🙏🏻