ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
👩🏻🏫இயந்திரங்களோடு பணிப் புரிய துடிக்கும் இவ்வுலகில்,
பிஞ்சு இதயங்களோடு இன்புற்றிருக்கும் உன்னதப் பணி ஆசிரியப் பணி..
👩🏻🏫என் சின்னஞ்சிறு கைப்பிடித்து நீங்கள் பழக்கப்படுத்தும் எழுத்துக்களில் என் வாழ்க்கை பயணிக்கிறது.
ஒற்றைச் சொல்லை நான் கற்றால் கற்றை மகிழ்ச்சி காணுது உங்கள் மனசு..
👩🏻🏫ஈரைந்து மாதம் என்னை நீங்கள் சுமக்கவில்லை..இரவு பகலாய் கண் விழித்து என்னை நீங்கள் வளர்க்கவில்லை
உங்கள் கண் முன்னே ஏடெடுத்து நான் படிக்கையிலே,நான் உங்கள்பிள்ளை என்ற எண்ணம் எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை..
👩🏻🏫 உலகில் அல்ல அல்ல குறையாதது கல்வியின்றி வேறேது..
ஊற்றாய் நீங்கள் உருவெடுத்து அருவியாய் தான் கொட்ட , ஆறாய் நான் மாறி ஆயிரம் கரை கடந்திடவே..
👩🏻🏫 தேர்வு தனில் நான் தேறும் போதெல்லாம், என
்னுடனே தேர்ச்சி தனை பெற்றவர் நீங்கள்.
👩🏻🏫வருடங்கள் பல ஆகலாம்,வயதும் பல கூடலாம்,உங்கள் முகம் தனை பார்த்து நான் ஓடி வரும் வேளையிலே..மேகமாய் என் மனம் குளிராதோ,கண்ணில் மழையாய் அது பொழியாதோ..
👩🏻🏫 தினமும் ஆயிரம் தடை தாண்டி என் வகுப்பு தனை நீங்கள் எட்ட,நான் கற்கும் கல்வியிலே உங்கள் காயங்கள் மறந்தீரே....
👩🏻🏫 அன்று உங்களுக்காக நீங்கள் படித்தீர்கள் உங்கள் வாழ்வு மலர்ந்தது..
இன்று எனக்காக நீங்கள் படிக்கையிலே ஒரு தலைமுறையே தலை நிமிர்கிறது...
🙏🏻நம் கைப்பிடித்து எழுதப் பழக்கிய நாள் முதல் நாம் கையெழுத்திட்டு கனவை மெய்ப்படுத்தும் காலம் வரை நம் வாழ்வின் ஒவ்வொரு தடையிலும் படிக்கல்லாய் நம்மை தாங்கி உயர்த்தும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.