அனைவரும் சமம் !
அனைவரும் சமம் !


சமத்துவம் அனைவருக்குமானதே !
வாய்ப்புகள் சகலருக்குமானதே !
தனித்திறமை - அது ஒவ்வொரு
தனி மனிதனுக்கும் அடையாளமே !
இயன்ற பொழுதெல்லாம்
இயன்ற வழிகளிலெலாம்
அனைவரையும் மேம்படுத்துவோம் !
உதவிக்கரம் நீட்டியே
உயர்த்திடுவோம் இயன்ற வரையே !
மேம்படுவோம் ! மேம்படுத்துவோம் !
அழகிய உலகம் அது
நம் சொந்தமாகுமே !