தாத்தா
தாத்தா
எனது சக்கரங்களில்
காற்று இருக்கும்வரை
உனை நான்
தூக்கியே செல்வேன்!
எனக்கு மட்டும்
அன்று சிறகுகள் கிடைத்த
மிதிவண்டி கிடைத்திருந்தால்
உனை நான் தூக்கி
சென்றிருப்பேனே பிரிய சகியே!
காற்று வேண்டுமானால்
தூயதாய் இல்லாமல்
இருந்திருக்கலாம்!
வயதான எல்லோர்க்கும்
சிறகுகள் முளைத்த
மிதிவண்டி இருக்குமானால்
வயதான அனைவருக்கும்
வாங்கி கொடுத்திருப்பேனே!
அன்பாலே நாம்
பிணைய இரு சிறகுகள் முளைத்த
மிதிவண்டி எங்கே கிடைக்கும்?
பிள்ளைகளிடம் யாசிக்காத
நிலை வேண்டி வாழ்கின்ற
யாம் பறக்கும் வண்டிக்காக
கரோனா காலத்தில் காத்திருக்கிறோம்!