உயிரோடு உலவும் ஜடங்கள்
உயிரோடு உலவும் ஜடங்கள்
இல்லையொரு பிள்ளையென
தவம் கிடப்போர் மத்தியில்
பெற்ற பிள்ளைதனை
குப்பைத் தொட்டியில்
நாய்களுக்கு விருந்தாக்கி செல்ல
மனம் எப்படி ஒப்புமோ?
பத்து மாதம் சுமந்த வயிற்றின்
கதகதப்பு கூட மறந்தறியா சிசுவை
வாரியே எடுக்கவும்
மறுதலிக்கும் கரங்கள்
துடிப்பிலா இதயங்கள்
இவை கொண்டவர்கள்
உயிரோடுலவும் ஜடங்களே !
