நிலவுக்கு ஒரு தூது
நிலவுக்கு ஒரு தூது


காற்று அண்ணா
மாசுபட்டதால் இருக்க
இடமின்றி தவிக்கின்ற
எங்களுக்கு இருக்க
நிலவில் இடம்
தருவாயா!
புவிமகள் நாங்கள்
காயப்படுத்திய மரத்தின்
கண்ணீருக்காக எங்களை
சபித்த புண் ஆறாது
முகமூடியால் மூடிக்கொண்டு
அலையும் எங்களுக்கு
உணவுடன் இடமும்
தருவாயா!
கதிரவனாய் கொரானா
வெப்பம் சுட்டெரித்தாலும்
குளிர்ந்த நிலவாய்
நீ காட்சி அளிப்பதால்
உன் முகம் நோக்கியே
நிம்மதி காண்கின்றேன்!
நூறுமுறை அனுப்பிய
மின்னஞ்சல் உடுக்களை
அனுப்பியபோதும் மௌனம்
காப்பது வேதனையன்றோ!
இனியும் நாங்கள்
மரம் வளர்ப்போம் என்றே
உறுதியளிப்போம்!