கூப்பிடும் தொலைவில்...
கூப்பிடும் தொலைவில்...
கூப்பிடும் தொலைவில் தான் இருக்கிறாய்...
காட்டிய அன்பில்....
கொடுத்த நம்பிக்கையில்...
பரிமாறிய நட்பில்...
தந்த வாக்குறுதியில்....
கழித்த பொழுதுகளில்...
ஏதோ ஒன்று எட்டிப்பார்க்கையில்...
கூப்பிடும் தொலைவில் தான் இருக்கிறாய்...
துரோகத்தின் வலி ஏனோ மவுனமாக்கி.......
ஏமாற்றத்தின் வலி ஏனோ தடுத்துவிடுகிறது...
கூப்பிட எத்தனிக்கும் போதெல்லாம்......