STORYMIRROR

Deepa Sridharan

Inspirational

4  

Deepa Sridharan

Inspirational

கூழாங்கற்கள்

கூழாங்கற்கள்

1 min
32


கடற்கரை மேனாமினுக்கிகள்

பன்னீர் குளிக்காத

பளிங்கு தேகங்கள்

அலைபூத்த சாம்பற்பூக்கள்

உப்பு பாகிலூறிய

உவர்ப்புப் பணியாரங்கள்!

வெயிற்காயும் பென்குயின்கள்

கைகால் முளைக்காத

கரு முட்டைகள்!

கட்டையுண்டு நெட்டையுண்டு

பருத்ததுண்டு இளைத்ததுண்டு

கோணலுண்டு உடைந்ததுண்டு

உருகுலைந்த வடிவுமுண்டு

சொரசொரக்கும் பாதமுண்டு

வழுவழுக்கும் முகமுமுண்டு

அத்துனையும் சிரிப்பதுண்டு

வாரியெடுத்து குலுக்கையிலே

உடலவமானம் எதற்கடா?

அகமகிழ்ந்து வாழடா!

தீபூத்த சிவப்பிருக்கும்

தார்வார்த்த கருப்பிருக்கும்

குப்பிவடித்த பச்சையிருக்கும்

கடல்கரைத்த நீலமிருக்கும்

பல்லிளிக்கும் வெள்ளையிருக்கும்

பஸ்பமான சாம்பலிருக்கும்

அத்துனையும் கொஞ்சிக்கிடக்கும்

மணற்படுக்கை விரிப்பினிலே

நிறமென்ன நிறமடா?

கரம்கோர்த்து வாழடா!

அலை உரைத்த ரகசியத்தை

மூடி வைத்தச் செவிமடல்கள்

என்மனை வந்தும் திறக்கலியே

அழுத்தக்கார கல்நெஞ்சங்கள்

அடுக்கி வைத்து உருகொடுத்தேன்

மனிதன் கொண்ட இதழ்கொடுத்தேன்

தூக்கியெறி கடலில் என்னை

கூச்சல் இட்டன கூழாங்கற்கள்!!!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational