கரம் கோர்ப்போம்
கரம் கோர்ப்போம்


அடுக்களையே பள்ளிக்கூடமாய்....
பணிவிடையே பதவியாய்....
பிள்ளைப்பேறே பெரிய பேராய்...
குடும்பமே உலகமாய்...
கணவனே கண்கண்ட
தெய்வமாய்...
அவனது சொல்லே மந்திரமாய.....
வழி நடந்த பெண்ணே...
உனக்காகப் போராடி....
உரிமையை மீட்டுத் தந்த சமூகம்.....
காலப்போக்கில்.....
உரிமையைத் தந்து...
உயர்பதவிகளைத் தந்து....
உத்வேகத்தை கொடுத்த சமூகம்....
பெண்ணை திருமண சந்தையில் மாடுகளாய் விற்றது!
பெரிதும் மாற்றம் ஒன்றுமில்லை!
அங்கே மாடுகள் பணத்திற்கு விலை பேசப்படுகின்றன...
இங்கே பெண்கள் பொன்னுக்கு விலை பேசப்படுகின்றனர்!
எத்தனை
.... எத்தனை பெண்கள் இளமையைத் துறந்து.....
இன்பத்தை மறந்து....
பெற்றோருக்கு விலை போகாத .....
குடும்பத்துக்கு பாரமான முதிர் கன்னிகளாய் காலம் கடத்தினர்!
காலம் மாறியது.....
வரதட்சணை வாங்க மாட்டோம்!
கொடுக்க மாட்டோம்! சமுதாய மாற்றம் சபாஷ் போட வைத்தது....
ஆயினும் .....
பெண்ணுக்கு எதிரான குற்றங்கள்?
தொடர்கின்றன!
வன்கொடுமைகள்.....
பால்மணம் மாறாத குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை!
குறைகள் எங்கே? குற்றங்கள் எங்கே?
ஆராய்ந்து பார்க்க நேரமில்லை!
பாதுகாப்பது நம் கடமை...
கரம் கோர்ப்போம்....
பெண்ணைக் காப்போம்!