Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chidambranathan N

Romance Classics Fantasy

4  

Chidambranathan N

Romance Classics Fantasy

கொரானா பொது முடக்கக் காலக் காதல்

கொரானா பொது முடக்கக் காலக் காதல்

1 min
212


கொரானா பொது முடக்கக் காலத்தில் நாங்கள் பிரிந்திருந்தாலும் தொடர்ச்சியாக நாங்கள் தொடரும் இந்த கொரானா காலக் காதல்!

விரைவில் சந்திப்போம் என்று நாங்கள் காத்திருந்தாலும் நாங்கள் சந்திக்காமல் தவிர்த்ததற்கான காரணம் இது கொரானா காலக் காதல்!

வெவ்வேறு பகுதிகளில் பிறந்த நாங்கள் காதலுடன் உரையாட முடியாததற்குக் காரணம் இது கொரானாக் காலக் காதல்!

எங்களை அருகில் சென்று காதலித்துப் பழகுவதற்குத் தொடர்ச்சியாகத் தடுக்கின்றதே இந்தக் கொரானா காலக் காதல்!

காதலர்களுக்கு அதிக வேதனைகளைக் கொடுத்துக் காதலர்களின் காதலினை அழிக்கப் பார்க்கின்றதே இந்தக் கொரானா காலக் காதல்!

பெரும்பாலான காதலர்கள் காதலினைத் தெரிவிக்கத் தயங்குகின்றனர்! காரணம் இது கொரானா காலக் காதல்!

கனவுகளில் கூடக் காதலர்கள் அச்சத்துடன் சந்திக்க மறுக்கின்றனர்! காரணம் இது கொரானா காலக் காதல்!

காதலர்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் விட்டு விலகிச்சென்று விடுகின்றனர்! காரணம் இது கொரானா காலக் காதல்!

பிரிந்து சென்ற காதலர்கள் மீண்டும் பேச முடியாமல் தவிக்கின்றனர்! காரணம் இது கொரானா காலக் காதல்!

மனம் விட்டுப் பேசவும், சிரித்துப் பேசிடவும், வருத்தம் தெரிவித்திடவும் இயலாமல் காதலர்கள் தவிக்கின்றனர்! காரணம் இது கொரானா காலக் காதல்!

புதிய காதலர்களின் காதல் ஒருதலைக் காதலாகவே போகின்றதே! காரணம் இது கொரானா காலக் காதல்!

காதலர்கள் அருகில் சென்று காதலிப்பதனைத் தவிர்த்துத் தொலைவிலிருந்தாலும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர்! காரணம் இது கொரானா காலக் காதல்!

சிறிய கோபங்களுக்காகக் காதலர்கள் நேரில் சென்று வருத்தம் தெரிவித்துத் தங்கள் காதலைத் தொடர இயலாமல் தவிக்கின்றனர்! காரணம் இது கொரானா காலக் காதல்!

காதலர்கள் தொலைவிலிருந்தாலும் தொலைப்பேசியின் மூலமாக ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடிகிறது! காரணம் இது கொரானா காலக் காதல்!

உண்மையான பாசத்தினைப் புரிந்துகொள்ள அழகான வாய்ப்பினைக் காதலர்களுக்குக் கொடுப்பதுதான் இந்தக் கொரானா காலக் காதல்!

மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதுதான் காதலில் சிறப்புடன் வாழ்ந்திட முடியும்! ஆனால் கொரானாக் காலத்தில்தான் வாழ்க்கையின் பெருமையினை உணர்ந்திட முடியும்! காரணம் இது கொரானா காலக் காதல்!

காதலின் ஆழத்தினைப் பார்க்காத காதல் என்பது இந்தக் கொரானா காலக் காதல்!

காதலின் முகவரியினைக் கேட்காதக் காதல் என்பது இந்தக் கொரானா காலக் காதல்!

வெகுதொலைவிலிருந்தாலும் தொலைப்பேசியின் மூலம் தொடரும் காதல் என்பது இந்தக் கொரானா காலக் காதல்!

சிறந்த காதலினைப் பற்றி முறையான வரைமுறையினை அடுத்த தலைமுறைக்குக் கற்றுத்தரும் காதல் இந்தக் கொரானா காலக் காதல்!


Rate this content
Log in