கோமாளி
கோமாளி
ஊர் ஊரா சுத்தி வந்தோம் கோடைகாலத்துல....
திருவிழா தேருன்னு இருக்கும் கோயில் கொளத்துவ....
தெருக்கூத்து நாடகமுந்தான் போட்டுடுவோம் தெரு ஓரத்துல....
மக்கள் தேடிக்கிட்டு வந்துடுமே இராத்திரி நேரத்துல....
துக்கத்தையெல்லாம் மறச்சிப்புட்டு.....
தூக்கத்தை யெல்லாம் தொடச்சிப்புட்டு...
புள்ளக்குட்டிய விட்டுப் புட்டு...
பொழப்பைத்தேடி சுத்துறமே காட்டுமேட்டுல!
கால் வயித்து கஞ்சிக்கு த்தான் காலுதேய சுத்துறோம்....
இராத்திரி பகலுன்னு பாக்காம ஓடியாடி உழைக்கிறோம்...
உங்களையெல்லாம் சிரிக்க வைத்து உள்ளுக்குள்ளே அழுகிறோம்!
அரிதாரம் கரைஞ்சிடாம அப்பப்போ துடைக்கிறோம்.
காலமெல்லாம் மாறிப் போச்சு!
எங்கள் கஷ்டமெல்லாம் கூடிப்போச்சு....
>
மக்கள் பாதை மாறிப் போச்சு...
டி. வி. க்குள்ள மூழ்கிப் போச்சு!
எங்க பொழப்பு பாழாப் போச்சு....
கண்ணீரெல்லாம் ஆறாப் போச்சு!
எங்க துன்பம் ஆரா ப்பேச்சு!
பாட்டாளி பொழப்பு எல்லாம் பாழாப் போயி கிடக்குது!
பகட்டான ஆடைக்கு த்தான் பவிசு எல்லாம் கிடைக்குது!
அபிஷேகமெல்லாம் நடக்குது கோயில் கொளத்துல....
அரை வயித்து கஞ்சிக்கு த்தான் நாதியத்து கிடக்குது குப்பை மேட்டுல!
என்னை௧்குத் தான் ஆத்தா கண்ணத் திறந்து பாக்குமோ?
அன்றாடம் கஞ்சிக்கு த்தான் வழி ஒன்ன காட்டுமோ?
புள்ளக்குட்டி முகத்துல சந்தோசந்தான் பொறக்குமோ?
சாதி சனம் இல்லாம நாதியத்து இருக்குமோ?
கோமாளி பொழப்பு எல்லாம் ஏமாளி ஆகிடுமோ?