கொழுக்கட்டையும் என் ஏக்கமும்
கொழுக்கட்டையும் என் ஏக்கமும்
தினமும் மனம் என்னும் இதை சுவைக்க என் ஒரு நாக்கு போதவில்லை,
அனைத்து பழங்களை விட என் அன்னை செய்யும் கொழுக்கட்டை மிக சுவையானது,
அவள் சமைக்கும் எல்லா கொழுக்கட்டையும் நானே உண்ண கொள்ள பேராசை என்னக்கு,
ஒரு நாலும் என்னால் அனைத்து கொழுக்கட்டையை உண்ண முடியாது.
வெள்ளை நிறத்து அரிசி மாவு சிற்பிக்குள் இருக்கும் போன் வண்ண தேங்காய் பூரணம்,
மேல் இருக்கும் அரிசி மாவு மெது மெதுவாய் வெந்த பொது அவிப்பறைக்கும் அடுப்புமேலே,
அன்புடனே பரிமாறுவாள் என் அன்னை அழகிய கொழுக்கட்டையை;இரண்டாக புட்டு வாயில் வைத்தவுடன,
கண்கள் காணும் இனிப்பு மழை மாறாதே ஒரு போதும் என் அன்னையின் கொல்லுக்கட்டையின் சுவை.
கொழுக்கட்டை அனுதினமும் உண்டதாலே நானும் அந்த பக்குவத்தை கற்றுக்கொண்டேனே,
வருடங்கள் பல நகர்ந்தன என் அன்னை இன்று என்னுடன் இல்லை இருப்பினும்,
அவளின் கைப்பக்குவம் கற்ற என்னால் சமைக்க இயலுகிறது சுவையான கொழுக்கட்டையை,
கட்டையில் போகும் வரை ஒவ்வொரு நாளும் கொழுக்கட்டையை சுவைக்க மனமும் நாவும் ஏங்குகிறது.
