கனவிலே காதல்
கனவிலே காதல்
1 min
225
என் கனவின் காதலி நீ அல்லவா..
காதலின் ஓசை நான் அல்லவா..
கனவிலே உன்னை பார்த்தேனடி பேசும் மொழியும் மறந்தேனடி..
இமைகளில் நூறு கண்டனே பார்த்ததும் இதயம் துடித்ததடி.. விரல்களை கோர்த்து நாம் செல்ல உணர்வுகள் சேர்ந்து நடந்தடி..
நீயும் நானும் ஒன்றாய் போக பாதையில் பூக்கள் முளைத்ததடி..
ஆசைகள் நூறு இருந்தாலும் கற்பனையில் வாழ்ந்தது அதிகமடி..
காலம் மாறி போனாலும் நீயே எனக்கு சொந்தமடி...
போகும் திசையில் நான் செல்ல நிழலில் உன் முகம் தெரிந்ததடி...
விழியில் உன்னை கண்டதுமே இதயம் துடிக்க மறந்ததடி..
உந்தன் மடியில் தலை சாய்க்க நெஞ்சம் ஏனோ ஏங்குதடி..
உன் கூந்தலின் வாசம் என்னை துரத்த மூச்சு காற்றும் தவித்ததடி...
இதழின் ஓரம் நீ ருசிக்க மனமோ ஏனோ துடித்ததடி..
காதலின் ஆழம் புரியாமல் நிஜமும் போயே உரைத்ததடி..!