கலைஞனின் படைப்பு
கலைஞனின் படைப்பு
எதுகையும் மோனையும்
மட்டுமின்றி படைப்பு
ஆன்மாவின்
சன்னல் திறக்க வேண்டும்!
கண்ணீர்த் துளிகளும்,
கனவும், காதலும்,
அன்பும், வாழ்வும்
அழகூட்டப் படவேண்டும்!
அழகூட்டலில்
உணர்வுகள்
உருக்குலையாதிருக்க வேண்டும்!
இசையோ
கவிதையோ
ஓவியமோ
அவை உலகம் தழுவச்
சொர்க்கம் காட்ட வேண்டும்!
கவிதை வரிகள்
காலம் கடந்து
உலவ வேண்டும்!
எந்த எண்ணத்தையும்
உண்மையுடன்
வெளிப்படுத்தினால்
அதுவே கலை!
அவனே கலைஞன்!
