காதல்
காதல்
தொடக்கம் தேடுகிறேன்
உன்னைப் பற்றி எழுத...😇
உன் கண்களைப்
பார்க்கும் போது
எந்தன் தாய்மொழியும்
மறக்கிறதடா...
என் மொழி மட்டுமல்ல
என்னை நானே
மறக்கிறேன்..🥰
கண்களாலே
வசியம் செய்யும்
மாயக் கண்ணனோ
நீ...😍
என்னுடன் மட்டும்
ஒளிந்து ஒளிந்து
விளையாடுகிறாய் ஏனடா...🥰
உன்னைப் பற்றி நினைக்கிறேன்
உன்னைப் பற்றி மட்டுமே
நினைக்கிறேன்
நானடா...😇
உன்னோடிருந்த தருணம்
என் வாழ்வின் பொக்கிசமான
மறக்க முடியாத
நினைவுகளைக் கொண்ட
அழகிய தருணம்...♡♡♡
அவன் கண்களால் கைதாகி,
இதயம் என்னும்
சிறைக்குள்
அகப்பட்டுவிட்டேன்...💝
