காதல் மழையே
காதல் மழையே
நான் பார்த்து இரசித்த முதல் காதல் என்றும் நீதானே
கண்களில் அன்போடும் உதடுகளில் சிரிப்போடும் என்னை இரசித்த காதலின் இதயம் துடிக்க ஆசைகளோடு உன் கைகோர்த்து நடந்தேன் பாதைகளும் பூக்களாய் தெரிந்தது..
வீசும் காற்றுக்குள்ளே என்னை இழுத்து சென்றாய் மேகங்கள் எல்லாம் வேக வேகமாய் சென்றது உன் நிழலை கண்டதும் மழைதுளிகளாய் மாறியது கொட்டும் பனி மழையில் உன்னை பார்த்த நொடிகள் இன்றும் கண்முன் நிற்கின்றது..
தேடிய காதலும் நான் மெய்சிலிர்த்த உனதன்பும் ஏராளமாய் கொட்டி கிடக்கின்றது..
வானமும் பூமியும் சண்டை போட்டு தவிக்கின்றது நான் கண்ட காதல் மழையை நீயென் அபகரித்தாயென்று..
காலம் நகர நகர உன் நிழலும் என்னை விட்டு சென்றது..
இன்று உன்னை கண்டதும் மழைத்துளிகள் எல்லாம் கண்ணீராய் மட்டும் தெரிகின்றது..
இதயம் துடிக்க மீண்டும் மேகங்கள் இருள் சூழ தொடங்கியது..