STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

கானக உலா

கானக உலா

1 min
227


மரங்களினூடே 

ஓர் இனிய உலா!


பூமித்தாயின்

உனனத அதிசயத்தை

அங்கே உணரலாம்!


அந்தக் குளத்து நீரில்

தென்றலின் தழுவலால்

ஓர் இன்பச் சலசலப்பு!


சூழ்ந்துள்ள அழகில்

மெய் மறந்தேன்!


சலசலக்கும் ஓடையில்

பசேலெனப் படபடக்கும்

இலைகளின் ஊடே

புள்ளினத்தின் இசையில்

எனை மறந்தேன்!


ஆதவனி்ன் பொன்னிறக்

கதிர்கள் 

மரங்களில் மின்னி

ஊடுருவி

மண்ணில் சித்திரங்கள்

வரையும் அற்புதம்!


ஒவ்வொரு காலத்திலும்

நிறம் மாற்றி உருமாற்றித்

தன்னைப் புதுப்பிக்கும்

புத்துணர்ச்சி!


அழகான மலர்ச்செடிகளின்

அற்புத நடனம்

கண்களுக்கு விருந்து!


அடிக்கடி

இயற்கையின் இருப்பிடத்தில்

உலா சென்றால்

உளம் அமைதியுறும்!


உவகையும் உறுதியும்

உற்ற துணையாய் 

நம்முடன் உலா வரும்!









Rate this content
Log in

Similar tamil poem from Abstract