காணா ஒரு காதல் காவியம்
காணா ஒரு காதல் காவியம்
எந்த சிந்தையில் உன்னை கண்டறிந்தேன் என்று தெரியவில்லை!
என் கனவுகளில் உன்னை சித்தரித்து, கவியமாக்குகிறேன்!
எனினும், ஏன் என்று புரியவில்லை'
உனக்கே தெரியாத பல கோடி உரையாடல்கள் உன்னுடன் கடந்துவிட்டேன்!
உன் விருப்பங்கள் எல்லாம் கோர்க்க கோர்க்க, என் விருப்பம் இன்றியும் நிறைவேற்றுகிறேன் என் கனவுலகில்!
புவியின் ஓரம் நின்று, உன் கரங்கள் கோர்த்து'
அந்த நீண்ட வானின் நிலவை நீ ரசிக்க,
உன் விழிகளின் ஓரம் நான் வேண்டும் என்ற எண்ணம் ததும்ப காதல் என்று வரைந்தேன்!
கூட்டமான பேருந்தில் மௌனமாக நம் இமைகள் கதைக்க காத்திருக்கிறேன்!
உன் ஒவ்வொரு சத்தமும் கொண்டு, என் வரிகளுக்கு வாழ்க்கை தருகிறேன்!
நான் எழுதும் கவிதை நீ படிக்க கேட்டு, கன்னம் சிவக்க காத்திருக்கிறேன்!
காணா காதலுக்கே இத்தனை கோடி கனாக்கள் கோர்த்திருப்பின், கண்டபின் கணக்கும் கடன் வாங்க கூடினால், கண்ணவனின் கண்களில் கைதாகும் கைதி என்னவோ காதல் வயப்பட்ட கிளவி நானோ!