STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

காமராசர்

காமராசர்

1 min
44

காமராஜர்

படிக்காத மேதையாம்… பார் போற்றும் வேந்தனாம்…

'கர்ம வீரராம்' கரைபடியாக் கரத்திற்கு சொந்தக்காரராம்!

'ஏழைப் பங்காளனாம்'… எங்கள் 'கருப்புக் காந்தி'யாம்!

'கிங் மேக்கராம்' நம் காமராசர்…

விருது நகரிலே விளைந்திட்ட எங்கள் வித்து!

வேறு எங்கும் கிடைத்திராத விலையுயர்ந்த முத்து!

சிவகாமி குமாரசாமியின் புதல்வன்

காமாட்சியாய் பிறந்து…

காம் ஆட்சிப் புரிந்திட்ட வேந்தன்நீ!

காட்சிக்கு எளியவனாய்….கடுஞ்சொல் பேசாதவராய்…

ஆட்சிப் பீடத்திலமர்ந்து அரிய பணி பல புரிந்திட்டாய்!

'படிக்காதமேதை' நீ என்றாலும்….

குழந்தைகள் படித்து மேதைகளாகிட…

பள்ளிகளை நாட்டினாய்!

பசித்த ஏழைமாணவன் புசித்து பசியாறிடவே…

பாழும் வயிற்றுக்கு சோறிட….

மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்த 'வள்ளலார்' நீ!

புனல் நீர் தேங்கி…அனல் தாக்கம் நீங்கி….

விவசாயம் ஓங்கி உயர்ந்திட…

அணைகள் பல அமைத்திட்ட 'பொறியாளன்' நீ!

வேலை வாய்ப்புப் பெருகி பஞ்சம் தஞ்சம் அடையாமல்..

வியாபாரம் தழைத்திட ஆலைகள் நாட்டிய…

'தொலைநோக்கு சிந்தனையாளன்' நீ! 

பதவிகள் பல நெருங்கி வந்த போதும்….

அதனைத்தீண்டாது…. அடுத்தவருக்கு வழங்கி

 அழகுப் பார்த்திட்ட….'கிங் மேக்கர்' நீ!

மெத்தப் படித்திட்ட  மேதைகள் என்றாலும்…

ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள் எனில்…

எதிர்த்து சூரையாடிய கரை படியா கரத்திற்கு சொந்தக்காரன் நீ!

ஏழைப் பாழைகள் வாழ்வில் ஏற்றம் கண்டிடவே…

வாழ்வினை வகுத்த பகுத்தறிவாளன் நீ!

கறுத்தது உம் தேகம் என்றாலும்…. வெளுத்தது 

உம் உடை மட்டுமல்ல! உம் உள்ளமும் தான்!

ஆண்டுகள் பல தாண்டினாலும்…. யுகங்கள் பல கழிந்தாலும்…

உம் நினைவுகள் இனிக்கும்! உம் கனவுகள் பலிக்கும்!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational