STORYMIRROR

Ravivarman Periyasamy

Romance

3  

Ravivarman Periyasamy

Romance

கா(வ)(த)லனோ

கா(வ)(த)லனோ

1 min
257

என் மனம் களி புரிய 

உன் முகம் நாணம் காணுமோ 

இதயம் உன்னது முகமூடி அணிந்ததோ 

பிறை காண திரை விலகுமோ 

மறை ஓத முறை செய்யவோ 

உனைக் கண்டு என் மனம் கணம் கொண்டதேனோ 

உன் நினைவு என்னோடு தப்பாமலே 

உன் பார்வை கொண்ட பாத்திரம் 

நான் அறியேனே 

என் பாதம் செல்லும் பாதை 

நீ அறியாயோ

விழித்திரையில் நிறைந்தாயே 

வழிப்பறியும் செய்தாயே 

வந்ததை விட்டே 

வழியும் மறந்தே 

சென்றதை தேடுகிறேனே 

காலம் சொல்லுமே 

காவலனாய் நிற்பேனோ

இல்லை அக்காட்டிலே மறிப்பேனோ

நின்றதைக் காணவே

நீ இருந்தால் போதுமே

நின்றாலும் போனாலும்

உன் முன்னே நானே...



Rate this content
Log in

Similar tamil poem from Romance