STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Others

4  

Arivazhagan Subbarayan

Abstract Classics Others

இருளில் நிவர்...!

இருளில் நிவர்...!

1 min
178

இருளில் ஊர்!

நிவர் புயலின் சீர்!


அன்பைச் செலுத்துவோர் 

அருகில் இருந்தும்

அருமை மறக்கிறோம்!


ஔியின் அருமை

இருளில் தானே

இதயம் தொடுகிறது!


மின்சாரச் சக்தியில்

மின்விளக்கு!

இறைசக்தியில்

உயிர் விளக்கு!


கூத்தாடும் குறைகுடங்களாய்

ஓயாத தவளை இரைச்சல்!

வாயால் கெட்டு

வாழ்க்கையிழக்கும் அவலம்!


மவுனம் கலைக்கும்

மழைக்கால ஓசை!


கார்மேகக் கடலினுள்

அமிழ்ந்த நிலவின் ஔி

அடுத்தநாள்

நிச்சயம் வரும்!


இருண்ட வானத்தின் கீழே

வாழ்வைக்

கையில் பிடித்துக்கொண்டு

மரங்களின் துடிப்பு!


நிலையற்ற மனங்களை

உணர்த்தும்

மாறும் இயற்கை!


மழை இனிதா? கொடிதா?

அளவுடன் இருந்தால்

அனைத்தும் இனிது!

அளவு மீறின் எதுவும் ஆபத்து!


நிவர் கடக்கும்!

விடியும்!

வெளிச்சம் வரும்!  


Rate this content
Log in

Similar tamil poem from Abstract