இல்லையடி பாப்பா
இல்லையடி பாப்பா
ஆணென்றும் பெண்ணென்றும்
பிறப்பில் மட்டுமேயன்றி
உன் உயர்வுக்கு தடைகளில்லையடி_பாப்பா
மேலென்றும் கீழென்றும்
செய்யும் செயல்களிலன்றி
நமக்குள் பேதங்கள் இல்லையடி _பாப்பா
விண்ணென்றும் மண்ணென்றும்
இருக்கும் இடமேயன்றி
நம் வெற்றிக்கு தடைகளில்லையடி_பாப்பா
தாய்மொழி அயல்மொழி
வெறும் கூற்றேயன்றி
கற்போர்க்கு எல்லாம் தேவையடி_பாப்பா
உயர்வும் தாழ்வும்
நம் பண்புகளிலேயன்றி
பிறப்பில் இல்லையடி _பாப்பா
பெரிதும் சிறிதும்
புறத்திற்கேயன்றி
நம் அகத்திற்கில்லையடி_பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா
உலகிற்கு இதை உணர்த்த
கல்வி கற்று சிறப்புறடி _பாப்பா.