STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Others

4  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Others

எது.. ஏன்..காரணம்??

எது.. ஏன்..காரணம்??

1 min
279

சிலரின் மனதுக்கு

பலரை பிடிப்பதும்..


பலரின் மனதுக்கு

சிலரை பிடிப்பதும்


சில வேளைகளில்

வியப்பாக இருக்கலாம்..

பல நேரங்களில்

புதிராகத் தோன்றலாம்

 

சிலருக்குப்

பலரை விரும்பிட

வலுவான காரணங்கள்

பலவாக இல்லாமல்

சிலவே இருக்கும்


பலருக்கு

சிலரை விரும்பிட

பலமான காரணங்கள்

சிலவாக இல்லாமல்

பலவாக இருக்கும்...


எண்ணும்

எண்ணிக்கையா? 

எண்ணும்

எண்ணமா?

எண்ணிப் பார்த்தால்

எல்லாமே புதிர்தான்..


கண்ணால் கண்டதை

எண்ணிப்பார்க்க நினைத்து 

வானின் நட்சத்திரங்களை

எண்ணிட இயலாது..


கண்ணைமூடி ஆழ்ந்து 

எண்ணிப் பார்த்தாலும்

மின்னலின் ஒளிவரைவை

மறைத்திட வழி கிடைக்காது....


சிலவும்..சிலநேரம் பலவும்..

பலவும்.. பலநேரம் சிலவும்.. 

மனதின் உள்ளே உலவும்...

சிந்தையின் வழியே நிகழும்


இரா.பெரியசாமி...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract