என்னவன்
என்னவன்
எந்தன் முழு முதல் காதல் பெற்றவன்,
முதன் முதலாக
எந்தன் சுவாசம் தீண்டியவன்,
எந்தன் கரம் பற்றியவன்,
என்னை ஆட்கொண்டவன்,
எந்தன் முகம் மலர செய்தவன்,
என் மனதில் அமைதியை ஏற்படுத்தியவன்,
எந்தன் காயங்களுக்கு மருந்தானவன்,
என்னை உந்தன் அன்பில் திக்குமுக்காட செய்தவன்,
என் வாழ்க்கைக்கு அர்த்தமானவன்,
என் உயிரில் கலந்திருப்பவன்,
எல்லாம் என்னவனாகிய நீ தான்....