தனிமையும் நானும்........
தனிமையும் நானும்........


தனிமையும் நானும் என்றுமே,
பிரிவு என்பதை அறியாதவர்கள்,
எத்தனை பேர்,
என் வாழ்வினில்,
வந்து சென்றாலும்,
தனிமை என்றும் என்னை விட்டு கொடுத்ததில்லை.....
எத்தனை முறை கலங்கினாலும்,
என்னை விடுத்து சென்றதில்லை....
எத்தனை முறை தடுமாறினாலும்,
என்னை பாதியிலே விட்டு விடுவதில்லை.....
அதுவும் எந்தன் துன்பத்தில்,
என்னை தனியே தவிக்க விடுவதில்லை.....
தனிமை என்றும் என்னுடனே பயணிக்கிறது.......