என் அன்புத் தோழியின் பரிசு
என் அன்புத் தோழியின் பரிசு
அன்பையும் நட்பையும் எனக்குப் பரிசாகத் தந்து கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
சமூக நீதிக் கருத்து புத்தங்களை எனக்கு அளித்து எனது அறிவையும் ஆறலையும் மேம்படுத்திக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
எளிய மக்களின் பெண்ணுரிமைப் போராட்டங்களில் என்னையும் பங்கு பெற வைத்துக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
ஆழ்மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றச் சிறந்த அறிவுரைகளைத் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
துன்பத்தினை போக்கி மகிழ்ச்சியான வாழ்வினை வாழ்வதற்கு ஏற்ற மனப் பக்குவத்தினை எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
இந்த உலகத்தில் பிறந்ததற்கு ஏதாவது சாதனை செய்து சிறப்புற வாழ வேண்டும் என்று என்னை ஊக்கப் படுத்திக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
வெற்றியினை நோக்கியே வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
தோல்விகளைக் கண்டு வாழ்க்கையில் துவண்டுவிடக் கூடாது என்று உற்சாகம் அளித்துக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து பாடம் கற்றால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
தவறுகளை ஒரு பொழுதும் செய்யக் கூடாது! தவறுகளைச் செய்பவர்களை ஊக்கப் படுத்தவும் கூடாது என்று முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
தேவையற்றச் சிந்தனைகளை எனது ஆழ்மனதிலிருந்து விலகிடப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
ஒழுக்கமான சிந்தனைகளுடன் உழைத்து மட்டுமே பொருள் ஈட்ட வேண்டும் என்ற கருத்துக்களை எனது எண்ணங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
அனைத்து விதமான நற்பண்புகளையும் நட்பின் பரிசாக எனக்கு அளித்துக் கொண்டிருக்கின்ற என் அன்புத் தோழி!
