குடும்பம்
குடும்பம்
பகலைத் தீண்டும்
இரவின் இருளில்
மறைந்து கூவும்(பாடும்) பூங்குயிலே
உன் குரலைக் கேட்க
நிறைந்த ஆற்றில்
குவிந்த அல்லியும்
இதழ் விரிக்கும்
இதழ் விரிக்கும்
அல்லியின் அடியில்
அலைந்து ஓடும்
ஆற்று மீனோ
அலையில் ஆடும்
இலைகளோடு போட்டியிடும்
அலையில் ஆடும்
இலையின் மீது
எறும்பு ஒன்று
தனித்து இருக்க
தனிமையில் தவித்த
எறும்பு அதற்கு
வின்னோடு சென்ற
மின்மினிகளின் பின்பம்
நம்பிக்கை தந்தது
நம்பிக்கையின் ஒளியாய்
என் வாழ்வில் எப்போதும்
எனைச் சுற்றி மின்னும்
என் வானத்து(எனது ஆற்று நீரின் பின்பம்)
மின்மினிக் கூட்டம்
என் குடும்பம்.
-சுகி
