STORYMIRROR

Chidambranathan N

Romance

3  

Chidambranathan N

Romance

என் அழகிய தோழியின் வாழ்க்கை

என் அழகிய தோழியின் வாழ்க்கை

1 min
290

என் அழகிய தோழி சின்னஞ்சிறு வயதில் சிட்டுக் குருவியாய் பறந்திருந்தாள்!
என் அழகிய தோழி பள்ளிப் பருவத்திலே சான்றோராய் திகழ்ந்திருந்தாள்!
என் அழகிய தோழி பதினாறு வயதினிலே கருப்பு மயிலாக அழகுடன் வலம் வந்தாள்!
என் அழகிய தோழி திருமண வயதில் தனக்கு ஏற்றத் துணையினை தேடி நின்றாள்!
என் அழகிய தோழி இல்லறத்தில் ஈடுபட்டு இன்புற வாழ்ந்து வந்தாள்!
என் அழகிய தோழி குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்துச் சிறந்த தாயெனப் பெயரெடுத்தாள்!
என் அழகிய தோழி தன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அனுதினமும் உழைத்து ஓடாய் தேய்ந்து போனாள்!
என் அழகிய தோழி மாமியார் என்ற உறவுக்குள் வரும்பொழுது கொடுமைக்காரப் பாவியெனப் பெயர் சூட்டப் பட்டாள்!
என் அழகிய தோழிக்கு உடல் நலக்குறைவு ஏற்படும்போது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடப்பட்டாள்!
என் அழகிய தோழி உறவுகள் எதுவுமின்றி தனியே வாடி வதங்கி நிற்கிறாள்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance