ஏக்கம்
ஏக்கம்


ஆங்காங்கே குட்டையாய்
அருகருகே நீர்நிலை
அதில் படர்ந்து விரிந்த
அருகம்புல் சோலை
அதில் விலை குறைவாய்
அழகாய் சேலை உடுத்தியவள்
அவளருகே இளம் பிஞ்சாய்
இரு பிள்ளைகள்...
நானோ நகரும் மின்சார
தொடர்வண்டியில்
நில்லாது செல்லும் பயனம்....
யார் என்றே தெரியாது
எவரென்றும் அறியாது
ஆனால் அந்த மழலையின்
கைகள் ஓய்ந்ததாய் இல்லை
வண்டியில் செல்வோருக்கு
செல்லமாய் டாட்டா காட்ட...
யாரேனும் ஒருவராவது
திரும்பி நமக்கு டாட்டா காட்டுவார்
என ஏக்கமும் தளராமையுடனும்
அந்த பிஞ்சுகள் ....
நினைத்தால் நெகிழ்ச்சி தான்....