சுயநலம்
சுயநலம்
என்னைப்போல் வேறாரும் உன்னைக் காதலிக்க முடியாது
எப்படியும் நீ என்னிடம் திரும்பி வருவாய் என்று காத்திருக்கிறேன்.
வேண்டாம். வராதே தேவி-
அது உன் நலமின்மையை, பிறிதோர் இடத்தில் நீ தோற்றுத் திரும்புவதை விரும்பும் என் சுயநலம்.
என் நினைவே வராதவாறு என்னைவிட சிறந்த அன்பை வழங்கும் கைகளுக்குள் நீ இரு.
நான் உன்னை என் பிரார்த்தனைகளுக்குள் வைத்துக் கொள்கிறேன்
காலத்திற்கும் காதலிக்கிறேன்.
இப்போதும் சொல்கிறேன்
நிஜமாகவே
என்னைப்போல் உன்னை வேறாரும் காதலிக்க முடியாதடி.