சமுகத்தில் தேடுகிறேன்
சமுகத்தில் தேடுகிறேன்
தேடுகிறேன்
இந்த சமூகத்தில்
விடை தெரியாமல்
தேடுகிறேன்...
பெண்களுக்கும்
குழந்தைகளுக்கும்
பாதுகாப்பு
எங்கே என்று
தேடுகிறேன்...
அரசியலில்
நல்ல ஆட்சி
வருமா என்று
தேடுகிறேன்...
ஏழை மக்களின்
வறுமையை
போக்க என்ன வழி
என்று தேடுகிறேன்
விவசாயிகளின்
நிலை மாறுமா...
அவர்களின்
வாழ்க்கைத்தரம்
உயருமா என்று
தேடுகிறேன்
கல்வி வியாபாரமாக
இல்லாமல் என்றைக்கு
கல்வியாக இருக்கும் என்று
தேடுகிறேன்
இன்னும் எத்தனையோ
கேள்விக்கு விடை அறியாமல்
தேடலைத் தேடிக்
கொண்டு இருக்கிறேன்..
இதற்கு எல்லாம்
பதில் எப்போது
கிடைக்கும் ???
