சதுப்புநிலத்தின் ஒரு குடியிருப்புப் பகுதி
சதுப்புநிலத்தின் ஒரு குடியிருப்புப் பகுதி
பெரு மழை பொழிந்து சில நாட்கள் கூட ஆகவில்லை!
மழை நீர் முறையாகக் கடலில் சென்று உடனடியாகக் கடலில் கலக்க முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லை!
பணக்கார வீடுகளின் வீதிகளில் உள்ள கழிவு நீரினை அகற்றிட உடனடியாக மாநகராட்சிப் பணியாளர்கள் வரவில்லை!
உணவின்றி தவித்த மக்கள் சமூக சேவை அமைப்புகளிடம் உணவினைப் பெற்றுப் பசியாற்றியபொழுது தன் குலப்பெருமையினை நினைத்துக் கவலைப் படுவதில்லை!
சாக்கடை நீரில் வாகனத்தினை ஒட்டிச் செல்லும்பொழுது மக்களின் மனது மகிழ்ச்சி அடைவதில்லை!
சதுப்புநிலத்தில் தண்ணீர்தான் வரும் என்கின்ற இயற்கையின் அறிவியல் உண்மையினை யாரும் யோசிப்பதும் இல்லை!
அடுத்த ஆண்டு மீண்டும் காற்றுடன் பெரு மழை பொழியும் வரை சதுப்புநிலத்தில் கழிவு நீர் வடிகால் வசதி ஏற்பட யாரும் முயற்சி செய்து முறையான திட்டமிடுவதும் இல்லை!
சதுப்புநிலத்தில் காணப்படுக்கின்ற அறிய வகைப் பறவைகள் குறைந்து போனதனை நினைத்துக் கவலைப் படுவதில்லை!
சதுப்புநிலத்தில் காணப்படுக்கின்ற அறிய வகை மீன் இனங்களும் சிறிய வகை உயிரினங்களும் குறைந்து போனதனை நினைத்துக் கவலைப் படுவதில்லை!
சதுப்புநிலத்தினைச் சார்ந்து இருந்த அடர்ந்த காடுகள் முற்றிலும் அழிந்து போனதால் அனைத்து விதமான காட்டு விலங்குகளும் அழிந்து போனதனை நினைத்துக் கவலை படுவதில்லை!
மழை பொழிந்து கழிவு நீர் வீதியில் வந்ததற்குக் காரணம் அரசாங்கத்தின் தவறு என்னும் மக்கள் தாம் சதுப்புநில பகுதியில் இயற்கைக்குச் செய்த பேரழிவைப் பற்றி உணர்வதில்லை!
நம்மிலிருந்துதான் இயற்கையினை பேணிக்காக்க வேண்டும் என்கின்ற எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை!
