அவன் ஒரு காவியம்
அவன் ஒரு காவியம்
(டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரைப் பார்த்து வியந்த தருணங்கள்)
வெல்லும் ஆட்டம் பாலே நடனம்
தோற்கும் பொழுதில் சோக நாடகம்
(போட்டியில்)
மின்னலாய் வெட்டி சட்டென (தோற்று) மறைவதும் காவியம்
ஃபீனிக்ஸ் பறவையாய் (எழுந்து) வெல்வதும் ஒரு காவியம்
ஆட்ட நாயகன் அவன் கோடியில் ஒருவன்
அவன்ரசிகர் கோடியில் நானும் ஒருவன்
அவன் களத்தில் இறங்கும் ஒவ்வொரு கணம்
நான் வியந்து மகிழ்ந்து ரசிக்கும் தருணம்
அதுவே அவனுக்கு சமர்ப்பணம்