அத்திவரதர்
அத்திவரதர்


நாற்பத்தெட்டு நாள் அனுபவம் எப்படியிருந்தது உனக்கு....
நாற்பது ஆண்டு சயனனிலை..கோடனகோடி மக்கள் கூறிய பிரச்சனைகளை கூர்ந்து கவனிக்க வைத்ததா ?
அத்தனைக் கூட்டத்தில் யாரைப் பார்ப்பது யாரை தவிர்ப்பது என்று பரிதவித்தாயா?
உன்னை பார்க்கத்துடித்த தவிப்புகள உனக்கு எப்படியிருந்தது ?....
மணிக்கணக்காக காத்திருந்த கால்களை நீ எப்படி ரட்சிக்க நினைத்தாய் ?.....
அடுத்த நாற்பதில் இருப்பமோ இல்லியோ என்ற ஓடி ஓடி வந்து உனைப்பார்த்தவரிகளின் தவிப்பு எப்படியிருந்தது ?..
ஒருமுறை பார்த்தால் திருப்திவராமல் பலமுறை பார்க்கத்தூண்டும் வசீகரம் உன்னிடத்தில் இருப்பது உனக்குத்தெரியுமா ?..அதனாலேயே திரும்பி திரும்பி உனைபார்த்தவரிகளில் பட்டியல் உனக்குத்தெரியுமா ?...
1979 ல் வெளியிருந்ததுக்கும் 2019ல் வெளியிருந்ததுக்கும் என்ன வித்தியாசம் கண்டாய் ?.. மக்கள் தொகையா.?....உன்னிடம் கொண்டுவந்த பிரச்சனைகளா ? இல்லை நடை உ
டை அலங்காரங்களா ?.. வழிபடும் முறையிலா .?
நீ உடுத்திய பட்டுக்களில் எது உனக்கு பிடித்து போனது ...?
குளத்திற்குள் இறங்குமுன் யாரைப் பார்க்க ஆசைப்பட்டாய் ?...
இன்னும் சிறிது நாள் இருந்துவிட்டு போ என்ற கெஞ்சுதல் உன் காதுக்கு கேட்டதா ?...
இருந்துவிட்டு போக உனக்கும் ஆசைதானா ?...
ஆமாம்..எப்படியிருப்பாய் அடுத்த நாற்பது வருடம்.....எந்த ஆராவாரமுமில்லா குளத்தில்...
என்ன செய்து கொண்டிருப்பாய்....? தியானமென்றால்..எந்த வகை தியானம் ?...
நாற்பத்தெட்டு நாள் சந்தித்தவர்கள் உன்னில் வந்து போவார்களா...?
எந்த மனநிலையில் அடுத்த நாற்பதை கடத்துவாய்....
அது என்ன நாற்பது கணக்கு....
தனிமையில் இருப்பது உன்ககு கஷ்டமில்லா இஷ்டம்தானா ?....
எதாவது சொல்லிவிட்டுத்தான் விடைபெறுங்களேன் அத்திவரதரே...!