அறியாமை
அறியாமை
கிணற்றுக்குள் பூதம்
போகாதே என்கிறார்கள்
பனைமரத்தில் பேய்
நெருங்காதே என்கிறார்கள்
இரவின் கொலுசொலி
மோஹினி என்கிறார்கள்
முருங்கை மரத்தை
வேதாளத்தின் வீடு என்கிறார்கள்
காகம் கரைந்தால்
விருந்தினர் வருகை என்கிறார்கள்
புரிய வைக்க முயன்று
பார்க்கிறேன் அறியாமை கொன்றுவிடும் என்று!!
