அரியும் அரிவையும்
அரியும் அரிவையும்
யாரும் நெருங்கிடாத
கற்புடைய மங்கை!
உலகென்னும் வீட்டிற்கு
ஒளி தரும் மடந்தை!
உலகம் வளம் பெற
உழைத்திடும் காரிகை!
கோதையில்லா வீடும்
சோதியில்லா நாடும்
இருள் சூழ்ந்திடும்!
இன்னல் மிகுந்திடும்!
பருவங்கள் ஏழு!
நிறங்கள் ஏழு!
அரியும் அரிவையும் ஒன்றே!
