அன்பும் காதலும்
அன்பும் காதலும்
அறிவியல் கூறுகிறது!
அன்பிற்குக் காரணம் மனித உணர்ச்சி என்று!
அந்த அன்பே உன்னுடன் பழகினால் கூறும்!
அருமையான அழகான உன்னுடைய காதலை!
அரசமரத்திலே இரு மயில்கள் இரை தேட வந்தன!
அந்த நேரத்தில் அதனைக் கண்டு உணர்ந்தேன்!
அன்பான காதலை உணர்த்த வார்த்தைகள் தேவையில்லை என்று!
அந்த அரச மரத்தினிலே அமர்ந்த மயில்கள் உணர்த்தின!
அன்பிற்கும் காதலுக்கும் உள்ள ஒற்றுமையை!
ஆண் மயில் அகவியது அழகிய காதலே நீதான் என்று!
ஆர்ப்பரித்து அகவிய பெண் மயில் கவிதையே உனது பார்வை என்றது!
1rem;">ஆலமரத்தினிலே ஆர்ப்பரித்து ஆங்காரமாக அகவின இரண்டு மயில்களும்!
அழகிய மயில்களை அரச மரத்தினிலே நான் கண்டிராவிட்டால்
அடிமனதில் எனக்குக் காதலும் வந்திருக்காது! கவிதையும் தெரிந்திருக்காது!
அருமையான அழகான உனது புன்னகையில்!
அறியாமல் என்னைத் தொலைத்தேனே?
அதுபோலவே உன்னையும் தொலைத்தேனே?
அழகிய உனது புன்னகையில் அனைத்தையும் தொலைத்தேனே?