அன்புள்ள நாளேடே - புத்தகங்கள்
அன்புள்ள நாளேடே - புத்தகங்கள்

1 min

23.5K
அன்புள்ள நாளேடே,
இன்று புத்தகங்கள் வழங்கும் இனிய அனுபவங்கள் கவிதையாய்.
உலகத்தையே கைக்குள்
கொண்டு தருகிறேன்
என்றே இணையம்
தன் தலையாய பணியை
உலகில் அனைவருக்கும் சமமாக
செவ்வனே செய்து கொண்டிருக்க
இந்த உலகத்தை விடு -
உனக்கு புதிய உலகத்தையே
சிருஷ்டித்து தருகிறேனென
புத்தகங்கள் - ஒவ்வொருவரின்
ஆர்வம் - விருப்பம் - கற்பனை -
இரசனைக்கு ஏற்ப
படிக்கும் நாள் பொழுதெலாம்
சிருஷ்டி கர்த்தாவாக
அவதாரம் எடுத்துக் கொண்டே
தானிருக்கின்றன.