Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

அம்மா

அம்மா

1 min
6


என் அம்மா...

 எப்போ எழுவாள் நான் அறியேன் 

என்னென்ன செய்வாள் நான் அறியேன். 

ருசித்து எதை உண்பாள் நான் அறியேன் 

எப்போ தூங்க போவாள் நான் அறியேன். 

அப்பாவுடன் அவள் காதல் நான் அறியேன். 

ஓய்வு எடுக்க சாய்ந்த நேரம் நான் அறியேன் 

தோழிகளும் அவளுக்கு உண்டா நான் அறியேன் உலகம் சுற்றி வந்தாளா நான் அறியேன் 

தனியே எங்கும் சென்றதில்லை; தவறியும் எவரையும் நொந்ததில்லை. தன்னுடன் இருந்தவளை அன்று நான் அறியேன் 

என் அம்மா....

எப்போ நான் எழுவேன் அறிவாள் என் அம்மா 

என்ன உடை நான் உடுப்பேன் அறிவாள் என் அம்மா உணவில் எனக்கு எது பிடிக்கும் அறிவாள் என் அம்மா 

படிப்பில் நான் சுட்டி அறிவாள் என் அம்மா 

எங்கெங்கு நான் போவேன் அறிவாள் என் அம்மா யாருடன் நான் விளையாடுவேன் அறிவாள் என் அம்மா

 மணம் முடித்து மறு வீடு புகுந்தேன் அறிவாள் என் அம்மா 

மழலை கண்டு மனம் மகிழ்ந்தேன் அறிவாள் என் அம்மா 

அறிந்தேன் நானும் அம்மாவாகி இன்று உன்னையே என் அம்மா!


Rate this content
Log in

Similar tamil poem from Classics