STORYMIRROR

Dr.Padmini Kumar

Classics

4  

Dr.Padmini Kumar

Classics

அம்மா

அம்மா

1 min
4

என் அம்மா....

சூரியனையே எழுப்பிடுவாள் என் அம்மா !

 சுறுசுறுப்பாய் வேலை செய்வாள் என் அம்மா! வேலைக்காரி அறிந்ததில்லை; அரவை இயந்திரம் கண்டதில்லை; வாஷிங் மெஷின் அவள் அறியாள்; ஆனாலும்.. சுறுசுறுப்பாய் வேலை செய்வாள் என் அம்மா !

பத்து மக்களைப் பெற்ற மகராசி என் அம்மா !

 சிறந்த பெற்றோர் என பட்டம் பெற்றவள் என் அம்மா !

அறுசுவை சமைத்திடுவாள் என் அம்மா 

ஆனாலும் அவள் உண்டு பார்த்ததில்லை எங்களுடன் !

கை நாட்டு என தந்தை நொந்து சொல்ல ,

ஐம்பது வயதிலும் கையெழுத்துப் போட

கற்றுக் கொண்டாள் என் அம்மா!

பேரன் பேத்தி என கண்ட பின்னும் 

அயராது தன் வேலையைத்

தானே செய்து முடிப்பாள் என் அம்மா!

வீடு நிறைய தன் குடும்பம் 

சிரித்து மகிழ்ந்து வாழ்ந்திடவே

விரதங்கள் இருந்திடுவாள்;

விரயங்கள் அவள் அறியாள்!

அடுத்த ஜென்மத்திலும் வர வேண்டும் என் அம்மா!



Rate this content
Log in

Similar tamil poem from Classics