அழகிய பாரதம்
அழகிய பாரதம்


பாருங்கள் நம் பாரதத்தை…
பாடுங்கள் அதன் அதிசயத்தை…
ஓடும் கங்கை ஆறும்…
பனியால் பூத்த இமயம்….
கோலம் யாவும் பேரின்பம்…
காணும் நேரம் ஆனந்தம்! (பாரு….)
அரபியும் வங்கமும் இந்துமாக் கடலுடன் கலக்குதே கலக்குதே!
அழகிய் முத்துக்கள் அதனடியினிலே அருமையாய் கிடைக்குதே!
பஞ்சாபும் சிந்தும் குஜராத்தியோடு குலவும்…
கன்னடமும் தெலுங்கும் கவின் மலையாளமும்
கொண்டது எங்கள் தாய்நாடு1
இந்தியா என்றே நீ பாடு! (பாரு…)
பலப்பல ஜாதிகளும் பலவித மதங்களும் இருந்திடும் நாட்டிலே!
இமயமும் குமரியும் இணைந்ததே இனிய பாரத வழக்கிலே!
மதங்கள் நூறு ஆனாலும் கொள்கை யாவும் ஒன்றே!
மொழிகள் நூறு ஆனாலும் எண்ணம் யாவும் ஒன்றே!
பாட்டால் பாடிட முடியாது – நம்
பாரத நாட்டின் பெருமையினை! (பாரு….)