STORYMIRROR

Mohan Prasath

Inspirational

4  

Mohan Prasath

Inspirational

ஆசை

ஆசை

1 min
250

கண்ணில்லா மனிதனுக்கு ஒளியின் மீது ஆசை!

பேசமுடியா மனிதனுக்கு பழமொழிகள்பேச ஆசை!

காலில்லாா மனிதனுக்கு பலமலைகள் ஏறஆசை!

கையில்லாா மனிதனுக்கு பிறருக்கு கைக்கொடுக்கக ஆசை!

கையேந்தும் மனிதனுக்கு அடுத்தவேளை உணவின்மீது ஆசை!

பயிரிட்ட உழவனுக்கு நெல்மணி செழித்துவளர ஆசை !

பரதநாட்டிய கலைஞனுக்கு அரங்கேற்றம் செய்ய ஆசை!

படிக்கின்ற மாணவனுக்கு அதிக மதிப்பெண் பெற ஆசை!

கற்பிக்கும் ஆசிரியருக்கு மாணவன் தேர்ச்சி பெற ஆசை!

பருவ வயது இளைஞனுக்கு காதலிக்க ஆசை!

பட்டதாரி இளைஞனுக்கு வேலை செல்ல ஆசை!

வேலைசெய்யும் மனிதனுக்கு அதிகபணம் பெற ஆசை!

பணமுள்ள மனிதனுக்கு பேசமனம் கிடைக்க ஆசை!

ஆசையில்லா மனிதன் இந்த அண்டத்தில் இல்லை!

அவ்வித மனிதனை இறைவன் படைக்கவும் இல்லை!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational