STORYMIRROR

Mohan Prasath

Inspirational

4  

Mohan Prasath

Inspirational

தமிழனை இழந்தோம்

தமிழனை இழந்தோம்

1 min
309

தனக்கு தெறிந்த தொழிலைத்தான் செய்வேனே-என்று

துணிச்சலோடு வாழ்ந்து வரும் மீனவேனே!

பாய்மரக் கப்பலிலே நீீ பாய்ந்து சென்று,

பாயைப்போல விரிக்கிறாய் வலையைக் கொண்டு!

மூச்சை பிடித்து நீயோ முத்தை எடுக்கிறாய்!

முத்தை முத்தாரமாக்கி மகளுக்கு கொடுக்கிறாய்!

துள்ளியாடும் மீன்களை தூக்கி செல்கிறாய்!

தன் குழந்தை உணவுண்டாளா என்று எண்ணிக்கொண்டு நடுக்கடலில் நிற்கிறாய்!

கடலிலேயே எல்லையிருப்பது எப்படி தெரியும்?

பாவம்நீ எல்லையைக் கடந்து விட்டால் தப்பாவா முடியும்!

அந்நியரிடம் அடிமையாய் மாட்டிக்கொண்டாயே!

உன்னை மீனைப்போல் அவர்கள் தான் தூக்கிச் சென்றாரே!

துன்பமுற்று நீயும்தான் சிறையில் நிற்கிறாய்!

தந்தையை காணோமென்று குழந்தையோ கடற்கரையில் நிற்கிறாள்!

உன்னை மீட்டு வர உன் குடும்பம் அரசிற்கு கடிதமிட்டனர்!

நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருப்பதாலோ உன்னை மீட்க மறந்துவிட்டனர்!

தன் துன்பத்தை போக்க இந்தியன் வருவான் என்று

எண்ணிக் கொண்டு இருக்கிறாய் சிறையில் நின்று!

-தமிழனை இழந்தோம்.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational