STORYMIRROR

Mohan Prasath

Inspirational

4  

Mohan Prasath

Inspirational

காகிதத்தின் கேள்விகள்?

காகிதத்தின் கேள்விகள்?

1 min
157

மரக்கூழிவிருந்து வந்தவன் நானே;

மாற்றத்தை உருவாக்கி தந்தவன் நானே! 

என்மீது எழுதுகின்ற ஒவ்வொறு எழுத்தும் ,

உணர்ச்சியுள்ள வரிகளாக மாறுகின்றதே!

கல்வியிலும் இன்றியமையா இடத்தைப் பெற்றேனே;

 வாய்ச்சொல் எடுபடாத இடத்திலும் வெற்றிப்பெற்றேனே! 

மனிதனின் பிறப்புக்கும், இறப்புக்கும் சான்று நானே, 

நாடுமுதல் வீடுவரை என் சேவைதானே! 

வண்ணம் தீட்டிய காகிதத்தை(பணம்) எறிவீரா நீங்கள்? 

என்னை மட்டும் கிழித்துகிழித்து எறிகிறீரே தாங்கள்! 

தொடுதிரை வந்தவுடன் நான் தொலைந்துபோனேனா?

 இக்கலியுலகில் நானும்தான் காணாமல்போனேனா?

 கிழித்து எறிந்துவிட்டு என்னை ஒருநிமிடம் பார்? 

உன் சிந்தனையின் உருவமாய் குப்பையில் இருக்கிறேன் பார்!

தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினாலும்- அது

 கடிதத்திற்கு நிகரான உணர்ச்சி தருமா?

காணாமலே கடிதத்தால் உறவு வளர்ந்தது-இன்றோ

 எதிரில் நின்றாலும் தலை நிமிர்ந்து பார்க்கமறுக்குது!

ஆயிரம் முறை தொடுதிரையில் பாடம் படித்தாலும்-அது 

புத்தகத்தை கையில் வைத்து படிப்பது போல் மகிழ்ச்சி தருமா?

இணையவழியில் தேர்வெழுதி வெற்றி பெற்றாலும்-அது

ஆசிரியரிடம்பெரும் விடைத்தாளுக்கு நிகராகுமோ?

இனியாவது ,என்னைக் கிழித்தெரியாமல்,

என்னுடன் உள்ள கருத்துக்களை படித்து அறியுங்கள்!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational