ஒருநாள் கரோனா அனுபவம்
ஒருநாள் கரோனா அனுபவம்
இரவு நேர செய்திகள் கனவில்
வந்து போக
காலை நேர பிரம்ம
முகூர்த்த வேளையில்
கரோனா சுரம்
வராதிருக்க பருத்தி
முகமூடியுடன்
கற்றாழை பிசினுடன்
கலந்த கொதிக்க வைத்த வேப்பிலை
சாறுடன் மஞ்சள்பொடியுடன்
கண்ணாடி குடுவையில்
ஊற்றித்தான் குடும்ப உறுப்பினர்
நலம் பேணிவர
சன்னல்,கதவு,வாசல்
அனைத்தும் படிகாரத்தூள்,வேப்பிலை
கலந்த நீரால் துடைக்கப்பட்டு
நிமிர்கையில் கடிகார முள் ஏழு தொட்டு
காலை வணக்கம் சொல்லியது!
தோட்டத்து மூலிகை
வாசத்தில்
மலர்ந்திருந்த பன்னீர் ரோசாவும்
துளசியும் என்னைக் கட்டவில்லையா
என்றே செல்லமாக நகைத்திட
தூதுவளையும்,பொன்னாங்கண்ணியும்
நானே இன்று உங்களுக்கு உணவாவேன் என
கொஞ்சி மகிழ
சுத்தம் செய்யப்பட்ட
அனைத்து அறைகளிலும்
சாம்பிராணி மணம் கமழ
உணவுகள் தயாரானதே!
இணைய உறவுகள் காத்திருக்க
மிளகுசாத மெனுவும்
தூதுவளை ரசமும்
எழுதிவிட்டு காத்திருக்க
இணைய செய்தித்தாள்கள்
கரோனாவைப் பறை சாற்றி
ஓய்வெடுங்கள் என்றதுவே!