ஆசிரியர்
ஆசிரியர்


படியாமல் இருந்தவனை படிய வைத்தும்
முடியாமல் இருந்தவனை முடிய வைத்தும்
கல்வியை சுவையாத நாவையும் சுவைத்தும்!
பாடத்தைக் கேளாத செவியையும் கேட்க வைத்தும்!
கல்லாக இருப்பவனை சிலைகள் ஆக்கி
வெற்றி நடைபோடுகிறீரே நீங்கள் விண்ணை நோக்கி!
அறிவுள்ள மாணவனுக்கு அகராதியாய்!
சராசரி மாணவனுக்கு சாரதியாய்!
ஏழை மாணவனுக்கு ஏணியாய்!
தாழ்ந்த மாணவனுக்கு தகப்பனாய்!
தோல்வியுற்ற மாணவனுக்கு தோழனாய்!
மாணவர்களுக்கு, எப்போதும் இருக்கிறீர்கள் பாதுகாவலனாய்!
எங்களிடம் கைகோர்த்து வந்துவிட்டு
எல்லா புகழையும் தந்து விட்டு
எங்கேதான் போகிறீரோ எங்களை விட்டு...